முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலம்பகம்

கலம்பகம் பெயர்க் காரணம்  கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு. பல வகையான பூக்களைச் சேர்த்து கட்டிய மாலையைக் கதம்பம் என்கிறோம். அதுபோல பல்வேறு வகையான செய்யுள் உறுப்புகள் அமையப்பெற்று பாடப்படும் பாமாலை கலம்பகம் ஆகும். கலம்பகத்தைக்  கலம்+ பகம் என பிரிப்பர். கலம் என்பது 12 பகம் என்பது அதில் பாதி ஆறு. அதாவது 18 செய்யுள் உறுப்புகளை உடையது கலம்பகம் ஆகும்  கலம்பக உறுப்புகள்   புய  வகுப்பு,மதங்கு, அம்மானை ,காலம், கார்,சம்பிரதம், தவம், குறம்,மறம், பாண்,களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தலை ,ஊசல் என்பன கலம்பக உறுப்புகள் ஆகும் கலம்பகச் செய்யுங்கள்   கலம்பகச்  செய்யுள்கள் கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 என்ற எண்ணிக்கையில் பாடப்பட வேண்டும் என்ற வரையறையை வெண்பா பாட்டியல் எடுத்துக் கூறுகின்றது. முதல் கலம்பகம்  கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகம் ஆகும் இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் குறித்து பாடப்பட்டது  காஞ்சி, ம...

தனிப்பாடல்கள்

தனிப்பாடல் விளக்கம்  தனித்தனி புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல்கள் என்று அழைக்கின்றோம்.  புலவர்கள் தமது உள்ளக் கருத்தை எவ்வித கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தாமல் விருப்பம் போல எழுதிய பாடல்கள் தனிப்பாடல்கள் ஆகும் இப்பாடல்களைத் தனிப்பாடல் திரட்டு என்ற தலைப்பில் தொகுத்துள்ளனர் தனிப்பாடல் அமைப்பு முறை  தனிப்பாடல் சொல் நயமும், பொருள் நயமும், சுவை நயமும் கொண்டு எளிமையாக எழுதப்பட்டவை ஆகும்.  ஓசை விளையாட்டு, சொல் விளையாட்டு, விடுகதை இவை அனைத்தும் தனிப்பாடல்களில் காணப்படுகின்றது  தனிப்பாடல் பாடியுள்ள புலவர்கள்   அவ்வையார், கம்பர் ,புகழேந்திப் புலவர், சத்தி முத்த புலவர், படிக்காசுப் புலவர், சொக்கநாதப் புலவர், ஒப்பில்லாமணி புலவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சந்திரசேகர கவிராச பண்டிதர் தமிழகம் முழுவதும் தேடி தனிப்பாடல்களைத் திரட்டி தொகுத்துள்ளார்.