முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கவிதை

 தேனும் இனிமை குழந்தைகளின் சிரிப்பும்  இனிமை பாலும் இனிமை குழந்தைகளின் பேச்சும் இனிமை பாகும் இனிமை மலரும் பூக்களும் இனிமை அதுபோல் குழந்தைகளே இனிமை                                                              ப.அ.சமன்யு

வாழ்க்கைத் தத்துவம்

வாழ்க்கை என்பது நமக்கும் சமுதாயத்திற்கும் இடையறாது நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு போராட்டம் .நீர்க்குமிழி போன்று தோன்றி மறையும் இவ்வாழ்வில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளும் நமக்கு பல உண்மைகளை உணர்த்திச் செல்கின்றது. இரவு பகல் என்னும் சதுரங்கப் பலகையிலே விதி மனிதர்களைக் காய்களாக்கிக் கொண்டு விளையாடும் சூதாட்டம் தான் வாழ்க்கை என்பது பாரசீக கவிஞர் உமர்கயாமின் கருத்து. வாழ்வு நிலையற்றது .நேற்று இருந்தவன் இன்று இல்லை .இன்று இருந்தவன் நாளை இல்லை என்று கூறத்தக்க உலகில் நாம் வாழ்ந்து  கொண்டிருக்கின்றோம்.இருப்பினும் இவ்வுலகம் நிலையானது என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம். நிலையாமை உலகத்தின் இயற்கை என்பதை உணர வேண்டும். பல நூல்களைக் கற்ற சான்றோர்கள் கூடியுள்ள அவையில் பலர் கூடி வாதிட்டாலும் தொண்டை கிழிய முழங்கினாலும் இவ்வுலகம் நிலையற்றது என்பதுதான் உண்மை. வாழ்வு மட்டுமல்ல நாம் நினைக்கக்கூடிய எண்ணங்களும் நிலைத்து நிற்பதில்லை. நிலையற்ற வாழ்க்கையிலும் நிறைவான இன்பத்தோடு வாழ்தலே மனித லட்சியம் அத்தகைய வாழ்வே அழியாத புகழை ஏற்படுத்தும்.

பாசப்பறவைகள்

பாசப்பறவைகள் வேஷம் இடுகின்றதே கஜானா காலியானதாலா? நேசம் மிக்க உறவுகளும் விலகிச் செல்கின்றதே உதவிக்கரம் நீட்ட வேண்டுமென்றா? முதிர்ந்த மரங்கள் கூட கனிகளைப் பாகுபாடின்றி கொடுக்கின்றது. மனிதன் தான் பாசத்தை பணத்திற்கு மட்டுமே பங்கிடுகின்றான்.

இயற்கையை மீட்டெடுப்போம்

நச்சுப் புகையால் நசுங்கிக் கொண்டிருக்கும் ஓசோன் மூச்சு அலைபேசி அதிர்வுகளால் அழிந்துவரும் சிட்டுக்குருவி இனங்கள் தருக்களின் அழிவால் வனப்பிழந்த வனங்கள் தண்ணீர் இல்லாமல்  வெப்ப காற்றைச் சுவாசிக்கும் நதிகள் நிலங்களைச் சாயம்  போன கந்தல் துணியாக்கும் சாயப்பட்டறைக்  கழிவுகள் செயற்கை உரங்களால் நஞ்சை விளைவிக்கும் புன்செய் நிலங்கள் ஏரிகள் எல்லாம் வீடுகள் மழைக்காலத்தில் வீடுகளை ஏரிகள் இத் தீர்வுகளுக்கான திறவுகோல்கள்... விவசாய நிலங்களின் மேம்பாடு   இனி அதுவே நமது பண்பாடு மரம் வளர்ப்பு அதுவே  இதம் தரும் இயற்கை பாதுகாப்பு மாரியின் மகிமை உணர்த்துவதே நமது கடமை செயற்கையில் இருந்து மீள்வோம்! இயற்கையின் வளத்தை மீட்டெடுப்போம்!

நட்பு

"முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு"  என்று உண்மை நட்பிற்கு இலக்கணம் வகுத்தார் வள்ளுவர் பெருமகனார். இன்று உண்மையான நண்பர்கள் யார் என்று பல நேரங்களில் இனம் கண்டு கொள்வது கடினமாக இருக்கின்றது.மரத்தின் நிறத்திற்கு ஏற்ப தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் பச்சோந்தி போல இடத்திற்கு ஏற்றவாறு மனிதர்களின் குணத்திற்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தி மனிதர்களை  இச்சமூகத்தில் காணமுடிகின்றது. பிறர் மனதை புண்படுத்தும் கேலி ,கிண்டல் பேச்சுக்கள் ,பிறர் உள்ளத்தைத் துன்புற செய்யும் ஜாடையான பேச்சுக்கள் இன்று பெருகிவிட்டன. பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் இந்நிலையில் உண்மையான ஆனந்தத்தை காண முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். வள்ளுவர் புறங்கூறாமை என்ற ஓர் அதிகாரத்தையே வகுத்துள்ளார்.வள்ளலாரும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் என்று அறிவுறுத்துகின்றார். வயதில் இளையவர்கள் சிலர் வயதில் பெரியவர்களை ஏய்! கிழவா ஏய்! கிழவி என்று கூறி பெரியவர்களின் உள்ளம் வருந்த தக்க செயல்களைச் செய்கின்றார்கள். வயதானவர்களும் உள்ளத்தால் இளமையானவர்கள் என...

விழுதுகள்

கனவு இல்லங்கள் அல்ல முதியோர் இல்லங்கள். மனதைக் கனக்க வைக்கும் இல்லங்கள். இன்று முதியோர் இல்லங்கள் பெருகி விட்டன. மனித மனங்கள் மரத்துவிட்டன. தளர் நடை இட்டு வரும் குழந்தையை தாங்கிப் பிடித்த மென்கரங்கள் இன்று கோலை துணையாக்கி கொண்டிருக்கின்றன. நிலவைக் காட்டி தன் குழந்தைக்கு அமுதூட்டி மகிழ்வித்த அன்னை இன்று முதியோர் இல்லங்களில் உணவு உண்ணும் அவலநிலையை எண்ணி உள்ளம் குமுறுகின்றது. குடும்ப வாழ்க்கையில் குழந்தைகளோடு இன்புற்று குதூகலித்த இன்ப நினைவுகள் பல தாய் தந்தையரின் கண்களில் கனவுகளாய் தோன்றி மறைகின்றன. நண்பர்களிடம் கால நேரம் பார்க்காமல் அரட்டை அடிப்பவர்கள் தங்கள் தாய் தந்தையரிடம் சிறிது நேரம் பேசுவதற்கு தயங்குவதும் ஏனோ? பொருள்களில் இல்லை இன்பம் .மனித மனங்களில் இருக்கின்றது இன்பம். இதனை அறிந்தவர் யாரோ? வீட்டின் முதுகெலும்பாய் திகழ்ந்து அயராது உழைப்பவர்கள் இவர்கள் .இவர்களின் முதுது இன்று உழைத்து உழைத்து கூனல் கண்டு விட்டது. சமுதாயத்தில் தன் பிள்ளையைத் தலைநிமிர்ந்து நடக்கச் செய்த பெற்றோர்களுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி விடாமல் இருக்க வேண்டும் பிள்ளைகள். பணத்தி...

அறம் வளர்த்த நாச்சியார்

குமரி மாவட்டத்தில் உள்ள சிறப்பு பெற்ற திருத்தலங்களில் ஒன்று சுசீந்திரம். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாமம் தாணுமாலயன். இவ்வூருக்கு நேர் வடக்காக ஒரு கல் தொலைவில் இருப்பது தேரூர் என்னும் பழம்பதி. ஏரிகளும் நெல் வயல்களும் சூழ்ந்த இயற்கை வளம் கனிந்தது இவ்வூர். உழவுத் தொழிலை குலத் தொழிலாகக் கொண்ட வேளாண் குடிமக்கள் பெருக வாழ்ந்தனர் இங்கே. சுசீந்திரம் திருக்கோவில் ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன் கல்வியும் செல்வமும் நிறைந்த ஒரு வேளாண் குடும்பத்தில் ஒரு பெண் தோன்றினாள். அவள் பெயர் அறம் வளர்த்தாள் என்பது. தாயார் பெயர் பள்ளியறை நாச்சியார். அறம் வளர்த்தாள் இளமையிலேயே இறை உணர்வு வாய்க்கப் பெற்றவராய் திகழ்ந்தாள். சுசீந்திரத்தில் எழுந்தருளியுள்ள தாணுமாலையர் மீது அவள் பக்தி உள்ளம் நிலைகொண்டது. வளர வளர பக்தியும் முதிர்ந்தது. அடிக்கடி சுசீந்திரம் சென்று பெருமானை தரிசித்து அளவில்லா இன்பம் துய்தாள். ஆண்டு 12 ஆக அறம் வளர்த்தாள் பூப்பெய்தினாள். அதனால் இற்செறிக்கப் பட்டாள். ஊர் வழக்கம் அது. நேர் நின்று பேச முடியவில்லை உள்ளூர  புளுங்கினாள். பொருமினாள். ஆற்றாமை  மிகுந்தது. அது காதல...