தனிப்பாடல் விளக்கம்
தனித்தனி புலவர்களால் பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களைத் தனிப்பாடல்கள் என்று அழைக்கின்றோம்.
புலவர்கள் தமது உள்ளக் கருத்தை எவ்வித கட்டுப்பாட்டிற்கும் உட்படுத்தாமல் விருப்பம் போல எழுதிய பாடல்கள் தனிப்பாடல்கள் ஆகும்
இப்பாடல்களைத் தனிப்பாடல் திரட்டு என்ற தலைப்பில் தொகுத்துள்ளனர்
தனிப்பாடல் அமைப்பு முறை
தனிப்பாடல் சொல் நயமும், பொருள் நயமும், சுவை நயமும் கொண்டு எளிமையாக எழுதப்பட்டவை ஆகும்.
ஓசை விளையாட்டு, சொல் விளையாட்டு, விடுகதை இவை அனைத்தும் தனிப்பாடல்களில் காணப்படுகின்றது
தனிப்பாடல் பாடியுள்ள புலவர்கள்
அவ்வையார், கம்பர் ,புகழேந்திப் புலவர், சத்தி முத்த புலவர், படிக்காசுப் புலவர், சொக்கநாதப் புலவர், ஒப்பில்லாமணி புலவர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
ராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சந்திரசேகர கவிராச பண்டிதர் தமிழகம் முழுவதும் தேடி தனிப்பாடல்களைத் திரட்டி தொகுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக