கலம்பகம் பெயர்க் காரணம்
கலம்பகம் என்பதற்குக் கலவை என்ற பொருளும் உண்டு. பல வகையான பூக்களைச் சேர்த்து கட்டிய மாலையைக் கதம்பம் என்கிறோம். அதுபோல பல்வேறு வகையான செய்யுள் உறுப்புகள் அமையப்பெற்று பாடப்படும் பாமாலை கலம்பகம் ஆகும்.
கலம்பகத்தைக் கலம்+ பகம் என பிரிப்பர். கலம் என்பது 12 பகம் என்பது அதில் பாதி ஆறு. அதாவது 18 செய்யுள் உறுப்புகளை உடையது கலம்பகம் ஆகும்
கலம்பக உறுப்புகள்
புய வகுப்பு,மதங்கு, அம்மானை ,காலம், கார்,சம்பிரதம், தவம், குறம்,மறம், பாண்,களி, சிந்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தலை ,ஊசல் என்பன கலம்பக உறுப்புகள் ஆகும்
கலம்பகச் செய்யுங்கள்
கலம்பகச் செய்யுள்கள் கடவுளுக்கு 100, முனிவருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, வேளாளருக்கு 30 என்ற எண்ணிக்கையில் பாடப்பட வேண்டும் என்ற வரையறையை வெண்பா பாட்டியல் எடுத்துக் கூறுகின்றது.
முதல் கலம்பகம்
கலம்பக நூல்களுள் காலத்தால் முற்பட்டது நந்திக் கலம்பகம் ஆகும் இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மன் குறித்து பாடப்பட்டது
காஞ்சி, மல்லை,( மாமல்லபுரம்) மயிலை (மயிலாப்பூர்) ஆகிய நகரங்கள் இந்நூலில் சிறப்பாக போற்றப்பட்டுள்ளது. சிறந்த சொற்சொவை, பொருள் சுவையோடு கற்பனை வளமும் நிறைந்ததாக இந்நூல் காணப்படுகிறது.
ஆசிரியர் பெயர்
இந்நூலின் ஆசிரியர் பெயர் அறியப்படவில்லை. நந்திக் கலம்பகத்தில் அகம் ,புறம் ஆகிய துறைகள் அமைய பெற்றுள்ளன. இருப்பினும் அகத்திணை செய்திகள் அதிகமாகவும், புறத்திணை செய்திகள் குறைவாகும் இடம் பெற்றுள்ளன.
கருத்துகள்
கருத்துரையிடுக